விஷபாட்டிலாக மாறுகிறாரா இலங்கை பெண் ஜனனி? மருத்துவமனை வரை சென்ற ரவுடி பேபி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனிக்கும், ரவடி பேபி ஆயிஷாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதை இன்றைய ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
கடந்த ஞாயிற்று கிழமை 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே கடும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஜிபி முத்து தனது கொமடியினால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.
நேற்றைய தினத்தில் ஆயிஷாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில், பிக்பாஸில் சிகிச்சை மேற்கொண்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இந்நிலையில் இன்று தண்டனை வாங்கிக்கொண்டு வெளியில் இருக்கும் 4 போட்டியாளர்கள் தங்களுக்கு பதிலாக மற்ற 4 போட்டியாளர்களை வெளியே தங்கவைக்க பிக்பாஸ் கூறியுள்ளது.
இதில் ஜனனி தனக்கு பதிலாக ஆயிஷாவை தெரிவு செய்த நிலையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் ஆயிஷா தான் வௌயே இருப்பதாக கூறியுள்ளார்.
இலங்கை பெண் ஜனனிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்து வரும் நிலையில், ஒரு சிலர் இவரை விஷப்பாட்டில் என்றும் அழகு அதிகமாக இருக்கும் இடத்தில் அதிக விஷம் இருக்கும் என்று திட்ட ஆரம்பித்துள்ளனர்.
அதே போன்று ரவுடி பேபிக்கு சாதாரண மூக்கு அடைப்பை பெரிது செய்து மூச்சுத்திணறலாக ஆக்ஷன் செய்ததை அவதானித்த ரசிகர்கள் ஜுலி 2.0 என்று கூறி கலாய்ச்சி வருகின்றனர்.