ரொமாண்டிக் காதல் பாடலில் கண்ணம்மா: மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூப்பரான பாடல்!
கண்ணம்மாவாக நடித்து பிரபல்யமான ரோஷிணியின் ரொமாண்டிக் ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியி தற்போது வைரலாகி வருகின்றது.
பழைய கண்ணம்மா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து பிரபல்யமான ரோஷிணி.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த தொடர் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர். ரோஷிணி கண்ணமாவாக நடித்து பிரபலமானரோ என்னவோ அந்த சீரியலில் பாரதியுடன் சண்டை போட்டு பேக்கை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக திரிந்த சம்பவம் தான் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
இவரின் தோற்றம் மாநிறமாக இருப்பதால் சிலர் தன்னை நிராகரித்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். மேலும்,இவற்றை தாண்டி சில குறும்படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு சில படவாய்ப்பு வருவதாக கூறி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவர் போனதுக்கு பிறகு இந்த சீரியலின் ரேட்டிங் குறைந்தும் போனது.
பிறகு கொஞ்ச காலம் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இன்னும் பிரபலமானார்.
புதிய ஆல்பம் பாடல்
இந்நிலையில் கொஞ்ச காலமாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியாமல் தவிர்த்த ரசிகர்களுக்கு ஒரு வீடியோ மூலம் சப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அந்தவகையில், ரோஷிணி முதல் முறையாக ஒரு ஆல்பம் பாடலில் நடித்து இருக்கிறார். அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.