விமானியைக் கரம்பிடித்த பிரபல நடிகை... வைரலாகும் திருமண புகைப்படம்
நடிகை ஜனனி தனது காதலர் சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜனனி
பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகிய ஜனனி, நெகிடி போன்ற படங்களில் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி சில மலையாள திரைப்படங்களிலும் நடிகையாக வலம்வந்த இவர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

இவர் துபாயில் விமானியாக பணிபுரிந்துவரும் சாய் ரோஷன் ஷாம் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் இன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு திரையுலக நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |