வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள்.. 37 வயதில் புற்றுநோயுடன் போராடும் பிக்பாஸ் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நடிகை ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஹினா கான் ஜம்மு
37 வயதாகும் மாடல் அழகி “ஹினா கான் ஜம்மு” காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் படித்துக்கொண்டிருக்கும் போது மாடல் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக மாறினார்.
ஒரு சில விளம்பரப்படங்களில் நடித்து பிரபலமான ஹினா கான் ஜம்முக்கு பஞ்சாப் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஹிந்தி பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். சரியான ஆதரவு கிடைக்காமல் வெளியேறிய ஹினா கான் ஜம்மு சீரியல்களில் நடித்து வந்தார்.
இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
சிறுநீரக பையுடன் இருக்கும் படங்கள்
இந்த நிலையில், மாதங்களுக்கு முன் கீமோ சிகிச்சைக்காக மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்தார்.
அதில், “புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று நான் நலமாக இருக்கிறேன்.நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாக தயாராகி விட்டேன். மார்பக புற்று நோய் மூன்றாம் கட்டம் என்று சொன்ன போது கவலையில் மூழ்கி போனேன்.
என் வாழ்கையில் அது மிகவும் மோசமான நாட்கள். ஆனால், அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். இருப்பினும், இந்த நோயில் இருந்து நான் முழுமையாக வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.." என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஹினா மருத்துவமனையில் சிறுநீரக பையுடன் நடந்து செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், குறித்த நடிகை சீக்கிரம் குணமடைய வேண்டும் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |