ஸ்ருதிகாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருந்து அவரே வெளியிட்ட காணொளி!
நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ஸ்ருதிகா கடந்த வருடம் இதே நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன் என குறிப்பிட்டு தற்போது மருத்துவ மனையில் இருக்கும் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்ருதிகா
சூர்யா ஜோடியாக ஸ்ரீ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்.
தன்னுடைய பள்ளி பருவத்திலேயே இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டார். தொடர்ந்து தித்திக்குதே, ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதிலும் இவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தன்னுடைய ரீ என்ட்ரியை பலமாக அமைத்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வெற்றி கொண்டார்.
அதனை தொடர்ந்து ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துக்கொண்டு ஹிந்தி, தமிழ் என இரு தரப்பில் இருந்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் இவருக்கு ஹிந்தி மொழியிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
குழந்தை தனமானவும் எல்லா விடயத்தையும் வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்ட ஸ்ருதிகாவை முதலில் பார்ப்பவர்கள் இவர் கவனம் ஈர்ப்பதற்கு தான் இப்படி சேசுகின்றார் என நினைத்தாலும், அவரின் இயல்பே அப்படி தான் என தெரிந்த பின்னர் ரசிகள் பட்டியில் சேர்ந்து விடுவார்கள்.
இந்நிலையில், தற்போது ஸ்ருதிகா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் காணொளியை பகிர்ந்து ஒரு நீண்ட பதிவையும் வெளியிட்டிருக்கின்றார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், ஒரு வருடம். இரண்டு உலகங்கள். நன்றியுணர்வு நிறைந்த ஒரு இதயம்.
சரியாக ஒரு வருடம் முன்பு, இதே நாளில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் - என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றை வாழ்ந்தேன். நான் நினைத்துப் பார்க்காத விதத்தில் என் வலிமை, பொறுமை மற்றும் உணர்ச்சிகளை சோதித்த ஒரு பயணம்.
இன்று, ஒரு வருடம் கழித்து, நான் முற்றிலும் மாறுபட்ட உலகில் என்னைக் கண்கின்றேன். கேமராக்கள் மற்றும் விளக்குகளால் சூழப்படவில்லை, ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குணப்படுத்தும் அமைதியான வலிமையால் சூழப்பட்டுள்ளது.
ஒரு பெரிய அறுவை சிகிச்சையாகத் தொடங்கியது மற்றொரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது - அது கருணை மற்றும் நம்பிக்கையின் சக்தியை எனக்கு நினைவூட்டியது. இந்த ரீலை ஒரு வகையான உண்மையான மருத்துவருக்காக அர்ப்பணிக்கிறேன்... என குறிப்பிட்டு ஒரு நீண்ட உருக்கமாக பதிவை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு மற்றும் காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |