இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் ஏடிகே என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி வாரத்திற்கும் செல்லும் போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6, 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்கு நுழைந்துள்ளார்கள்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் ரக்ஷிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியே சென்ற அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
மேலும் இந்த வாரம் பிக் பாஸின் டாஸ்க்கள் அணைத்தும் மிகவும் கடுமையாகவும் சென்டிமேட்டாகவும் இருந்தது.
வெளியேறிய போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வார எவிக்ஷனில் அசீம், கதிர், மைனா, ஏடிகே, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதில் இன்றைய தினம் வெளியேறும் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் புதிய டுவிஸ்ட் ஒன்றையும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஏடிகே தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏடிகேவிற்கு சுமார் 20 இலட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.