பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறும் போட்டியாளர்களில் திடீர் மாற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்று கூறப்படும் நிலையில், வெளியேறும் போட்டியாளர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையிமல் தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜிபி முத்து தானாகவே இரண்டாவது வாரத்தில் வெளியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் வெளியேற நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் ஆயிஷா, அசீம். ஜனனி, கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகியோர். இந்த 6 போட்டியாளர்களில் இருவர் வெளியேற்றப்பட உள்ளார்களாம்.
முதலில் ராம் மற்றும் ஏடிகே வெளியேற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ராம் மற்றும் ஆயிஷா இருவர் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இரண்டத்தில் காணப்படுகின்றனர்.
அசீம் எப்பொழுதும் போல் அதிக வாக்குகளைப் பெற்று முதல் ஆளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.