பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லை மீறும் மாயா... கண்டுக்கொள்ளாத கமல்: நடிகை கஸ்தூரி ஆதங்கம்
'பிக் பாஸ் சீசன் 7' தொடர்பில் பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி, ஆதங்கத்தோடு வெளியிட்ட சில தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தங்களுடைய கருத்தையும் விமர்சனங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சனம் ஷெட்டி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, போன்ற பிரபலங்கள் சிலர் ஊடகங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ செய்து வரும் நிலையில், கஸ்தூரி அவ்வபோது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை, வெளிப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த சீசன்களில் இல்லாத வகையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில சொல்லமுடியாத விஷயங்கள் அரங்கேறி வருவதாகவும், இருட்டு நேரத்தில் லிப் லாக் கொடுப்பது, பாத்ரூமில் கொஞ்சுவது போன்ற விடயங்கள் இடம்பெறுவதாகவும் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயங்கள் மீடியாக்களில் காட்டப்படுவது இல்லை. எனக்கு மாயா பற்றி ஏற்கனவே தெரியும், அவர் எப்படி பட்டவர் என்பது. ஆனால் கமல் அவர் எது செய்தாலும் அசமந்தமாகவே செயற்படுகின்றார்.
நிக்சன் முன்பு மாயா உள்ளாடையை காட்டியது, காமெடி என கூறி அதனை அப்படியே விட்டுவிட்டார். இது குறித்து கமல் கண்டித்திருக்க வேண்டாம். ஆனால் கண்டும் காணாதது போல் இருந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் போது பிரதீப் குறித்து பேசிய கஸ்தூரி, "பிரதீப் பண்ண விஷயம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் பிரதீப்புக்கு புரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |