அசீம் வெற்றி பெற்றது கமல் விரும்பவில்லையா? அடுத்த சர்ச்சையை கிளப்பிய மகேஷ்வரி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் வெற்றியாளரை அறிவித்த பின்பு கமல் கொடுத்த ரியாக்ஷன் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6வது சீசன் ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக 3 பேர் இருந்தார்கள்.
விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இவர்களில் ஒருவர் வெற்றியாளர் என கூறப்பட ரசிகர்கள் அதிகம் விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று பலராலும் எதிர்பா்க்கப்பட்டு வந்தது.
ஆனால் விக்ரமன் இரண்டாவது இடத்தைப் பிடித்து முதல் இடத்தினை அசீம் பெற்றதால், பரிசுத்தொகை மற்றும் காரை தட்டித் தூக்கினார்.
வெற்றியை விரும்பவில்லையா கமல்?
மக்கள் பலரும் அசீம் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் அசீம் வெற்றிப்பெற்றது பிடிக்கவில்லை என்று புகைப்படம் ஒன்றிறை வெளியிட்டு நபர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இதற்கு பிக்பாஸ் மகேஷ்வரி உண்மை என்று பதில் அளித்துள்ளார்.
அதாவது கமல்ஹாசன் அசீமை வெற்றியாளர் என்று அறிவித்த பின்பு, அவர் விக்ரமன் தோள் மீது கை போட்டுக்கொண்டு நின்றார். இதனை பிடித்துக்கொண்ட ரசிகர்கள், கமல் சில காரணத்தால் தான் வெற்றியாளரை அறிவித்திருப்பார் என்றும் அதனை குறித்த புகைப்படமே வெளிப்படுத்தியுள்ளது என்று கருத்து போட்டுள்ளார்.
இந்த கருத்திற்கு பிக்பாஸ் மகேஷ்வரியும் உண்மை என்று பதில் அளித்துள்ளார்.
True ? https://t.co/KnKUKQSzY6
— Vj_Maheswari (@maheswarichanak) January 23, 2023