எனக்கு எதிராய் இருப்பதற்கு உனக்கு தகுதி இல்லை! ஏடிகேவை இப்படி கூறினாரா அசீம்?
“என் எதிரியாய் இருக்க உனக்கொரு தகுதி இல்லை” என பதிவிட்டு அசீம், ஏடிகேவின் மூக்கை உடைத்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்த முடிந்த ஷோ பிக் பாஸ் சீசன் 6. இந்த போட்டியில் இறுதி போட்டியாளராக சிவின், அசீம், விக்ரமன் ஆகிய மூன்று பேரும் தெரிவுச் செய்யப்பட்டார்கள்.
அதில் அசீம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாம் இடத்தையும், சிவின் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். இதனை தொடரந்து அசீமின் வெற்றி சமூக வலைத்தளப்பக்கங்களில் ஒரு பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.
இவ்வளவு இழிவான ஒருத்தரை தான் டைட்டில் வின்னராக்கியுள்ளீர்கள் என விமர்சித்து வருகிறார்கள். இருந்த போதிலும் அசீமின் வெற்றி சரியெனவும் சிலர் வாதித்து வருகிறார்கள்.
ஆனால் இவர் பல முறை பிக் பாஸ் வீட்டில் பெண்களை அவதூறாக பேசியது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி, பல முறை நாமினேஷனுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் பொம்மை டாஸ்க்கில் அசீம் தன்னை தவறான இடத்தில் தொட்டார் எனக்கூறிய தனலெட்சுமி, வெளியில் வந்தவுடன் அது ஒன்றும் தப்பு இல்லையெனக் கூறியுள்ளார்.
ஏடிகேவின் பதிவிற்கு பதில் பதிவு கொடுத்துள்ளார் அசீம்
இது குறித்து ஏடிகே, “ ஒருவரை தவறாக தொடுவதற்கு, ஆரோக்யமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸ் என்பது ஒரு ஷோ மட்டும் தான். இதனை ஆராயும் வேளையை விட்டு விட்டு உங்களின் அடுத்த வேலையை பாருங்கள். சக போட்டியாளர்களை பற்றி வன்மத்தை கக்குவதை விட்டுவிட்டு உங்களின் அடுத்த வேலைகளுக்காக மீடியாவை பயன்படுத்துங்கள். நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த அசீம்,“ ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள், இதனை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியும். உங்கள் அபிமான போட்டியாளர்கள் குறை கூறினால் மட்டும் அமைதியாக இருப்பீர்கள். எங்களை பார்த்து மட்டும் கொதிப்பீர்களா? பிக் பாஸ் முடிந்து விட்டது நான் தற்போது என்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறேன் உங்களின் புகழை சரியாக பயன்படுத்தி வளருங்கள் நண்பா ” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, “சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி அல்ல நான், ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோல் மேல் நோக்கி எரியும் தீபம். என்றும் என் பேச்சு ஒன்றுதான் ! “என் நண்பனாய் இருக்க தனி தகுதி தேவை இல்லை, என் எதிரியை இருக்க உனக்கொரு தகுதி இல்லை. வளர்த்துக்கொள்ள வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் “அசீம் டைட்டில் வின்னர் ஆகிவிட்டார் என்ற ஆதங்கத்தில் பேசுகிறார்” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.