ஏடிகேவின் தலைமுடியை பார்த்து புகழ்ந்த பிரபலம்! என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த ஏடிகேவின், தலைமுடியை பார்த்து ஜிபி முத்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 நேற்றைய தினம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அசீம் அவர்கள் டைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸ் புகழ்ச்சியின் படி பார்த்தால் விக்ரமன் தான் டைட்டில் வின்னரை அடிப்பார் என ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அது முறிக்கப்பட்டு டாஸ்க்கின் பிரகாரம் அசீம் வெற்றி வாகை சூடினார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை ஒரு முக்கிய போட்டியாளராக இருந்த ஏடிகே 90 நாள்களின் பின்னர் வெளியேற்றப்பட்டார்.
இவரின் உடல் நிலை பிக் பாஸ் வீட்டில் திடீரென சரியில்லாமல் சென்றது. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி சூழல் ஏற்பட்டு விட்டது. இது போன்று காரணங்களால் தான் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கலாய்த்த ஜிபி முத்து
இந்நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பங்கேற்றப் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டார்கள்.
இதன்போது ஜிபி முத்து மண்டையில் முடியில்லாமல் இருக்கும் ஏடிகேவை கலாய்த்துள்ளார். மேலும் ஏடிகே குறித்தும் சில நெகிழ்வூட்டும் கருத்துக்களை கொடுத்துள்ளார்.
மேலும், ஏடிகே அவர்கள் இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “ஜிபி முத்து மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னர்” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.