அசீமை டாஸ்கிலிருந்து அதிரடியாக வெளியேற்றிய பிக்பாஸ்! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பொம்மை டாஸ்கில் இருந்து அசீம் மற்றும் விக்ரமனை பிக்பாஸ் அதிரடியாக வெளியேற்றியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து மற்றும் சாந்தி என இரண்டு பேர் வெளியேறிய நிலையில் தற்போது 19 பேர் உள்ளே கடுமையாக விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸும் போட்டியாளர்களிடையே கடுமையாக சண்டையை ஏற்படுத்தும் டாஸ்க்கை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் எதிர்பாராத சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
அசீமை வெளியேற்றிய பிக்பாஸ்
பொம்மை வைக்கும் இடத்தில் ஒரு இடம் காலியாக இருக்கும் நிலையில், மீண்டும் விளையாடுவதாக அசீம் கூறியதையடுத்து பிக்பாஸ் போட்டியை தொடங்கினார்.
ஆனால் இதில் அசீம் மற்றும் அசல் இருவரும் சரியான நேரத்தில் வராத காரணத்தினால் அவர்களது கையிலிருந்த பொம்மை, அதாவது அசீம் கையில் விக்ரமன் பொம்மையும், அசல் கையில் அசீம் பொம்மையும் இருந்ததால் பிக்பாஸ் அசீம், விக்ரமன் இருவரையும் போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கரமாக சூடு பிடித்துள்ளது.