பிக் பாஸ் அர்ச்சனா, அருண் வெளியிட்ட புகைப்படம்... காதலர் தின ஸ்பெஷல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் இன்று காதலர் தினத்தை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
அர்ச்சனா அருண் ஜோடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 7ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற அர்ச்சனா வெற்றிக் கோப்பையை தட்டித் தூக்கினார்.
இவர் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட அருண் பிரசாத்தை காதலித்து வந்துள்ளார். அருண் பிரசாத் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ஆவார்.
பின்பு அர்ச்சனா சினிமா வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது காதலருக்கு சமூக வலைத்தளங்களில் வாக்குகளையும் சேர்த்து வந்தார்.
இவர்கள் இருவரின் காதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே வெளியே தெரிந்தது. இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் இருவரும் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
இந்த காதலர் தினத்தில் ஒரே நிறத்தில் உடையணிந்து கொண்டாடியுள்ள நிலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |