அமீர்-பாவனிக்கு திருமணமா? காதலர் தினத்தில் வெளியான புதிய பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்தனர்.
அமீர் - பாவனி
ஹைதராபாத்தை சேர்ந்த பாவனிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரின் கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.
அதன் பின்னர் தனிமையில் இருந்த பாவனிக்கு விஜய் தொலைக்காட்சியில் சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.
சின்னத் தம்பி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் நடிகை பவானி. அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்சிச்சியில் கலந்துக்கொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் ஆனார்.
வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் பாவனி நீண்ட நாட்கள் காதலை ஏற்க மறுத்தார். இருப்பினும் இந்த ஜோடிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இவர்கள் இணைவது அவர்களையும் தாண்டி ரசிகர்களின் ஆசையாக மாறியது.பின்னர் ஒரு வழியாக BB ஜோடிகள் நிகழ்சியில் காதலை உறுதியாக அறிவித்தனர்.
இவர்கள் காதலிக்க ஆரம்பித்ததும் பாவனியின் முதல் திருமணத்தை வைத்து சிலர் இணையத்தில் மோசமான கமெண்ட்டுகளை பரப்ப ஆரம்பித்தனர்.ஆனால் அவர்கள் எல்லா கமெண்டுகளை தாண்டி நிஜத்தில் ஒன்றாக இணைந்து Living Relationshipல் உள்ளார்கள்.
மேலும் அவர்கள் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் ஜோடியாக நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது அவர்கள் அஜித் உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தனர். அது அப்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் காதலர் தினமான இன்று பாவனி மற்றும் அமீர் ஒன்றாக கை கோர்த்து கடல் கரையில் ஓடிவரும் புகைப்படத்தை வெளியிட்டு ComingSoon என்ற பதிவை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ,இது இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பா அல்லது ஏதேனும் பாடல் குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |