அமுதவானனை விளையாட்டாக அடித்த இலங்கை பெண்! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் முன்பு நடித்து, நடனமாடிய இலங்கை பெண் அவரைத் தாக்கிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ஜனனி அமுதவானன்
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களில் மக்களை அதிகம் கவர்ந்த பெண்ணாக வலம் வருபவர் தான் இலங்கை ஜனனி. இவர் அமுதவானனின் கைப்பாவையாக வலம்வருவதாக சக போட்டியாளர்கள் குற்றம் சுமத்தினர்.
இதில் அதிகமாக கஷ்டப்பட்ட ஜனனி கதறி அழுததோடு, நீதிமன்ற டாஸ்கிலும் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை பெற்றார். தற்போதும் அமுதவானனுடன் பேசிக் கொண்டிருந்த ஜனனியிடம், நவரசத்தை காட்டக் கோரி சில செய்கைகளை செய்யக் கோரியுள்ளார்.
இதற்கு ஜனனியும் தனது முழு திறமையினை வெளிக் கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் 5 லட்சம் பணம் கேட்டபோது அமுதவானன், நக்கலாக பேசியதால் கடுப்பாக்கிய ஜனனி அவரை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.