நீண்ட கால காத்திருப்பின் பலன் இதுவா? குட் நியூஸ் சொன்ன அமிர்-பாவனி
பிக்பாஸ் பிரபலங்களான அமீர்- பாவனி இருவரும் நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்களின் திருமண திகதியை அறிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை பாவனி.
இதனை தொடர்ந்து “சின்ன தம்பி” என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சீரியலை விட்டு திடீரென விலகினார்.
மேலும் பாவனியின் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் தன்னுடைய கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். சில பல காரணங்களால் பாவனியின் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மீடியாத்துறையிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 ல் ஒரு முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த அபிநய் - பாவனியை காதலிக்கிறார் என பல வதந்திகள் கிளம்பின. இதற்கு ஒரு திருப்பு முனையை வைல்டு கார்டு என்றி கொடுத்தார் அமீர்.
இவர் பாவனியை காதலிப்பதாக பாவனி உட்பட அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார். இதற்கு பாவனி, “ என்னுடைய மனதில் என்னுடைய கணவர் இன்னும் இருக்கிறார்.” என கூறி அமிரை நிராகரித்தார்.
திருமணத்தை அறிவித்த அமீர்-பாவனி
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீரும் பிடித்தார்கள்.
இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றனர். பல முறை தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அமீரை ஒரு தடவை மனம் மாறி தன்னுடைய காதலைக் கூறி பாவனி ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமீர்- பாவனி இருவரும் தங்களின் திருமணம் குறித்து பகிர்ந்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், “நீண்ட கால காத்திருப்பின் பலன் இப்போது தானா?” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
