உயிருக்கு போராடும் பிரபல நடிகை- உடனே KPY பாலா செய்த உதவி
பிரபல காமெடி நடிகை பிந்து கோஷ் உடல்நிலை சரியில்லாமல் தவித்து வரும் நிலையில், KPY பாலா உதவி செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை பிந்து கோஷ்
80ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிந்து கோஷ்.
இவர் தற்போது வயது மூப்புடன் உடல்நலை சரியில்லாமலும் இருக்கிறார். அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டம் அனுபவிக்கிறார்.
ஆரம்பத்தில் பிந்துக்கு உதவி செய்த சில நடிகர்கள் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் பிந்து கோஷ் வருத்தப்பட்டு இருந்தார்.
அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதில் மூத்த மகன் தன்னை பார்க்க முடியாது என்று பெங்களூருக்கு போய் விட்டார். இரண்டாவது மகன் தான் தன்னை பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறியுள்ளார்.
ஓடிப் போய் உதவிய KPY பாலா
இந்த நிலையில், KPY பாலா பிந்துகோஷ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். அத்துடன் பிந்துகோஷிற்கு 80,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.
KPY பாலா தனியாக செல்லாமல் நடிகை ஷகிலாவையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.
பிந்துவுக்கு பாலா யார் என்றே தெரியவில்லை ஆனாலும் பாலாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறார்.
அப்போது பாலா, “உங்களை நான் சின்ன வயசில் சினிமாவில் பார்த்திருக்கிறேன் அம்மா, இப்போ உங்களை இப்படி பாக்குறதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கு..” என்றும் பேசியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


