Bigg Boss 10: எவிக்ஷன் பாஸை தவறவிட்ட ஜேசன்... விஜய்சேதுபதி முன்பு கோபத்தில் கத்திய தருணம்
Akshita Eviction: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அக்ஷிதா வெளியேறியுள்ள நிலையில், ஜேசன் கண்ணில் மரண பயணத்தை காட்டி கொந்தளிக்க வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல ரிவியில் கடந்த செப்படம்பர் மாதம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் பல போட்டியாளர்கள் வைல்டு கார்டு ஆகவும் வந்தனர்.
தற்போது இன்றுடன் 70 நாட்களை கடக்கும் நிலையில் 14 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வந்தனர். போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பேராக இனிவரும் வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் அவினாஷ், அக்ஷிதா, ஜேசன், அஸ்மிதா என நான்கு பேரை மட்டும் விஜய் சேதுபதி நிற்க வைத்தார்.
இதில் ஜேசன் வைத்துள்ள நாமினேஷன் ப்ரீ பாஸ் வரும் வாரத்துடன் முடிவடைவதால், அதனை பயன்படுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜேசன் அவினாஷிற்கு கொடுப்பதாக கூறினார்.
அவினாஷ் தனது நண்பன் என்று கொடுக்கவில்லை... உண்மையான எதிரி என்று தான் அவனுக்கு கொடுப்பதாக ஜேசன் கூறினார். இதனால் அவினாஷ் இந்த வாரம் ஜேசன் மூலமாக காப்பற்றப்படுவதாக அறிவித்தார்.
வெளியேற்றப்பட்ட அக்ஷிதா
பின்பு மீதம் இருந்த மூன்று பேரில் சட்டென அக்ஷிதா கார்டை எடுத்து காட்டி விஜய் சேதுபதி அதிர்ச்சி கொடுத்தார். மேலும் மீதம் இருக்கும் அஸ்மிதா, ஜேசன் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று சக போட்டியாளர்களிடமும் கேட்கப்பட்டது.
போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை கூறினர். விஜய் சேதுபதி சட்டென எவிக்ஷன் கார்டு ஒன்றினை எடுத்துக் காட்டினார்.
உடனே சட்டென ஜேசன் சத்தம் போட்டு கூச்சலிட்டு உடனே எழுந்து விஜய்சேதுபதி முன்பு தனது கோபத்தினையும், ஆக்ரோஷத்தினையும் வெளிப்படுத்தினார்.

ஆனால் எவிக்ஷன் கார்டில் அஸ்மிதா பெயர் தான் இருந்திருக்கும் என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எவிக்ஷன் கடைசி நொடியில் ஜேசன் கண்ணில் இருந்த பயம் இதுவரை யாரும் அவதானிக்காத முகமாகவே இருந்தது.
ஆக மொத்தம் இன்று இரண்டாவதாக வெளியேறிய நபரை பார்வையாளர்களுக்கு காட்டாமல் சஸ்பென்ஸாக வைத்து ப்ரொமோவை முடித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |