பிக் பாஸில் எல்லை மீறும் ஐஷு... கோபத்தில் பெற்றோர்! இன்ஸ்டாவால் வெளியான உண்மை
பிக் பாஸ் வீட்டில் ஐஷு நிக்சன் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷுவின் பெற்றோர்கள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் முடியும் நிலையில் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இதில் முதல் நபராக அனன்யாவும், பாவா சுரேஷ், விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா என ஐந்து போட்டியாளர்கள் தற்போது வரை வெளியேறியுள்ளனர்.
மேலும் கடந்த ஞாயிற்று கிழமை 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றுள்ளனர். இதனால் வீட்டில் பிரச்சினைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் நிக்ஷன், ஐஷுவின் காதல் தற்போது வைரலாகி வருகின்றது. ஐஷு ஊட்டியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் ஊட்டியில் ஏடிஎஸ் என்ற நடன பள்ளியை வைத்து நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட அமீரை ஐஷுவின் தந்தை தத்தெடுத்து வளர்த்து வந்தது மட்டுமின்றி அவரை நடன இயக்குனராகவும் ஆக்கியுள்ளார்.
ஆனால் தற்போது அமீருக்கும், ஐஷு குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், பேச்சு வார்த்தை இல்லை என்றும் கூறப்படுகின்றது.
நிக்சன் ஐஷு காதல்
பிக் பாஸ் வீட்டில் நிக்சன் வீசிய காதல் வலையில் ஐஷு சிக்கியுள்ளார். இதனால் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார்.
இவர்களின் செயல் சமூக வலைத்தளங்களில் கோபத்தினை ஏற்படுத்தும் விதமாக எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது.
தற்போது ஐஷூவின் வீட்டிலும் பெற்றோர் எதிர்த்து வருவது தெரியவந்துள்ளது. அதாவது ஐஷு பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவரது தாய் ஷைஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்காக ஆதரவு திரட்டி வந்தார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக எந்தவொரு பதிவையும் போடாமல் உள்ளதால், இதனை அவதானித்த நெட்டிசன்கள் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்று கூறி வருகின்றனர்.
மேலும் ஐஷுவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தான் அவர்கள் எந்தவித பதிவும் போடாமல் இருக்கிறார்களோ எனறு கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு புறம் நிரூப் தான் ஐஷுவின் காதலர் என்றும் அவரும் இவரது பதிவிற்கு டிஸ்லைக் கொடுத்து வருவதால், அவரும் ஐஷு மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
நிரூப் அமீர் மூலமாக வீட்டிற்கு அறிமுகம் ஆகியதால் பெற்றோர்கள் அமீர் உடனான பேச்சு வார்த்தையை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |