வீட்டில் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கனுமா? குபேர பொம்மையை இந்த இடத்தில் வைங்க
வீட்டில் குபேர பொம்மையை வைத்தால் அனைத்து பிரச்சினையும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும் நிலையில், இதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குபேர பொம்மை
புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வரும் நிலையில், இதன் உண்மையான பெயர் சிரிக்கி புத்தர் என்பதாம்.
வீட்டில் துரதிர்ஷ்டத்தை நீக்கவும், அதிர்ஷ்டத்தை கொடுக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் செய்வதாக நம்பப்படுகின்றது.
சில வீடுகளில் தொடர்ந்து வரும் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை போன்றவற்றுக்கு தீர்வாக குபேர பொம்மையை வாங்கி வைப்பதுண்டு.
இந்த பொம்மைக்குள் இவ்வளவு சக்தியா என்று கேட்கும் நபர்களுக்கு, பதில் என்னவெனில், சிரித்துக் கொண்டிருக்கும் இந்த சிலையை நீங்கள் அவதானித்தால் உங்களை அறியாத ஒரு ஆனந்தம் நிம்மதி கிடைப்பதுடன், மன அழுத்தமும் குறையும். இதுதான் இந்த பொம்மையின் ரகசியம் ஆகும்.
எந்த திசையில் வைக்கலாம்?
குபேர பொம்மையை நீங்கள் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே எதிர்பாராத செல்வ செழிப்பை தருவதுடன், குடும்ப வருமானம் அதிகரிக்கவும், எதிரிகள் மறையவும் செய்வார்கள்.
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வைத்தால் சுபிட்சமும், வருமானமும் அதிகரிக்கும். குழந்தைகள் படிக்கும் மேசைக்கு கீழே வைத்தால், பிள்ளைகளின் சோம்பேறி தன்மை மாறி படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
குபேர பொம்மையை கிழக்கு திசையை நோக்கி வைப்பது நல்லது என்பது ஐதீகம். இந்த திசையை எதிர்கொள்ளும் குபேர பொம்மை மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிதி செழிப்புக்கு உதவியாக இருக்கும்.
மேலும் வடக்கு திரையை நோக்கியும் வைக்கலாம். இதனாலும் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றியடைய முடியும்.
படுக்கும் அறை மற்றும் உணவு சாப்பிடும் இடத்தில் தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானம் இரண்டு மடங்காகவும் அதிகரிக்கும்.
குபேர சிலையை பரிசளிப்பது, பரிசளிப்பவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் நல்ல பலனைத் தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |