ஜெயிலர் பட பாடலுக்கு தங்கையுடன் இறங்கி ஆட்டம் போடும் அமீர் - வியந்து போன இணையவாசிகள்
ஜெயிலர் திரைப்பட பாடலுக்கு தங்கையுடன் இறங்கி ஆட்டம் போடும் அமீரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடனத்தை தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்தவர் தான் அமீர்.
இவர் மீடியாவிற்குள் வரும் போது நடனம் மாத்திரம் தான் தெரியும். இதனை தொடர்ந்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்தார்.
பின்னர் அங்குள்ள பாவனியை காதலித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
ஜெயிலர் பட பாடலுக்கு குத்தாட்டம்
இந்த நிலையில் பாவனி - அமீருடன் என இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், இன்றைய தினம் திரைக்கு வரும் ஜெயிலர் திரைப்பட பாடலுக்கு தன்னுடைய சிறிய தங்கையுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த காட்சிகள் பார்க்கும் போது அமீரின் திறமைகள் அப்பட்டமாக தெரிகிறது.
அத்துடன் அமீருக்கு ஈடுக் கொடுத்து ஆட்டம் போடும் குட்டி தங்கையின் காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |