வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் நடிகர் விஜயின் நண்பர் - லீக்கான தகவல்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. ஐந்து வாரத்தை நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியில் இதுவரை எதிர்ப்பார்த்த டிஆர்பி வராமல் பயங்கர அடி வாங்கி இருக்கிறது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் நுழைய உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையபோகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிய சஞ்சீவ் பிக்பாஸில் ராஜுவுக்கு போட்டியாக செம என்டர்டெயினராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.