நா கெட்டவே தான்.. அனல் பறக்க பேசிய கெமி- நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து முதல் நாளே கெமி அனல் பறக்க கம்ருதின் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.
இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
நேற்றைய தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
அனல்பறக்க பேசிய கெமி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9-ன் முதல் நாளே பிக்பாஸ் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் கெமி கடுப்பாகிய கத்திய காட்சி சின்னத்திரை ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
கெமி பேசிக் கொண்டிருக்கும் பொழுது மகாநதி சீரியல் நடிகர் கம்ருதின் நடந்து சென்றதால் கோபமடைந்த கெமி, “ நா பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடந்து போகாதீங்க. அது நல்லது அல்ல. குரலை உயர்த்தி பேசாதீங்க..” என கூறுகிறார்.
இதனை தொடர்ந்து கெமியால் கோபமான கம்ருதின், “ நான் நல்லவனா இருந்தாலும் நல்லவே-ன்னு சொல்லமாட்டாங்க, அதுனால நா கெட்டவனாவே இருக்கே..” என சபரியிடம் கூறுகிறார். ஆனாலும் வீட்டுக்குள் வந்த முதல் நாளே போட்டியாளர்கள் சண்டையிடுவது டிஆர்பி ரேட்டிங்கிற்காக என சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |