பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சாதிய பேச்சு! இதை விடவே கூடாது... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வரும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சாதிய ரீதியான கருத்துகள் எழுந்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இணையத்தள வாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார். அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருந்தார்கள்.
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து நந்தினி வெளியேறியிருக்கின்றார். தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து முதல்வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். கடந்த வாரம் அப்சரா வெளியேறியிருந்தார்.
சாதிய பேச்சு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக இருக்கிறார் சுபிக்ஷா. மீனவ பெண்ணான இவர், சொந்தமாக மீன் ஊறுகாய் விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.
அது மட்டுமன்றி, தமிழில் முதன்முறையாக கடலிற்கு சென்று ரீல்ஸ் செய்யும் யூடியூபர் என்கிற பெருமையும் இவரையே சாரும். இந்த பெண் குறித்து சக போட்டியாளரான கம்ருதீன் பேசியிருப்பதுதான் தற்போது இணையத்தில் சர்ச்சையாக மாறியிருக்கின்றது.
குறித்த காணொளியில், கம்ருதீன் சுபிக்ஷாவிடம், “நீ இப்படியெல்லாம் பேசாதே..அது நீ எப்படி வளர்க்கப்பட்டிருக்கிறாய், நீ எங்கிருந்துவருகிறாய் என்பதை காண்பிக்கிறது..” என்று கூறியுள்ளார். அதற்கு சுபிக்ஷா, “எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றால் என்ன? தேவையில்லாமல் பேசாதீர்கள்” என்றார். உடனே கம்ருதீன், “நீ கையை இறக்கி பேசு, நான் இங்கே கஷ்டப்பட்டு உழைத்து வந்திருக்கிறேன்..” என்றார்.
தற்போது, இந்த சூடான உரையாடல் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. குறித்த காணொளிக்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்சியில் சாதிய ரீதியிலான இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.
— சுதன் NTK (@SuthanNayagam) October 20, 2025
இதைக்குறித்து பேசாமல் @VijaySethuOffl அவர்களும் கடந்து சென்றிருப்பது வியப்பாக உள்ளது.!#BiggBossTamil9 #Subiksha#Kamrudinpic.twitter.com/ieakTEwJW8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |