Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்ட்ரா சமையலைக் குறித்து பிரஜனிடம் விக்ரம் கூறிய நிலையில், இதனால் ப்ரஜன் பிக்பாஸிடம் கதவை திறந்து வைக்க கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில்ஒ ளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அடுத்தடுத்த பல டுவிஸ்டுகளை கொடுத்து வருகின்றது.
கடந்த நாட்களில் நடைபெற்ற காமெடி டாஸ்கினால் இரண்டு நாட்கள் சண்டையின்றி சென்ற பி்க் பாஸ் வீட்டில் தற்போது சண்டை மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் சரியாக விளையாடாத நபராக சாண்ட்ரா மற்றும் திவ்யா இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் சிறைக்கு சென்றுள்ளனர்.
மேலும் இவர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இன்று வேலை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுத்துள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சத்தில் காணப்படும் திவ்யா, வியானாவிடம் நெய் வைக்கும் போது தனது கோபத்தை காட்டியுள்ளார்.
மற்றொரு புறம் விக்ரம் சாண்ட்ரா சமையல் குறித்து பிரஜனிடம் கூறியதால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பிரஜன் பிக்பாஸிடம் இரண்டு நிமிடம் கதவை திறந்து வைக்க சொல்றன்... உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க என்று கூறியுள்ளார்.
கணவன் மனைவி இருவரும் விக்ரமை எதுவும் பேசவிடாமல் சண்டை போட்டு நெருக்கடி கொடுப்பது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |