தெறி பட குழந்தை நைனிகாவா இது? அழகில் அம்மாவையே ஓவர்டேக் செய்த புகைப்படம்
தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நைனிகாவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை நைனிகா
நடிகை மீனாவின் மகளான நைனிகா, விஜய் நடித்த தெறி படத்தில் அவருக்கு மகளாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மீனா பெண் என்ற அறிமுகத்துடன், நைனிகாவின் நடிப்பும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது.
தெறி படத்திற்கு பின்பு பல படங்களில் நடித்து வந்த நைனிகா, தெறி படத்தில் விஜய்யை அப்பா என்று அழைக்காமல் பேபி என்று தான் அழைப்பார்.

இதற்கு விஜய்யும் பதிலுக்கு பேபி என்று தான் அழைத்தார். அதிலிருந்தே பேபி நைனிகா என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இப்படத்தில் மிகவும் ஹைலைட்டாக இருந்தது விஜய், நைனிகா நடிப்பு தான்.

இவர்களின் குறும்புகள், சேட்டைகள் பலரையும் கவர்ந்த நிலையில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் சுட்டிக்குழந்தையாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது நைனிகாவிற்கு 6 வயதாக இருந்தது.

பின்பு படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நைனிகாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் நைனிகா பெரிய பெண்ணாக வளர்ந்து காணப்படுவது நம்ம குழந்தை நட்சத்திரமா இது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது பள்ளிப்படிப்பை படித்துவரும் நைனிகா, தாயைப் போல் நடிக்க வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |