தலைகீழாக படுத்து சோகம் தணிக்கும் சௌந்தர்யா- நெட்டிசன்கள் கலாய்க்கும் குறும்படம்
சௌந்தர்யா சோகத்தில் தலைகீழாக படுத்திருக்கும் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
தற்போது 60 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரங்களில் இல்லாதவாறு நேற்றைய தினம் டபுள் எவிக்ஷன் கொடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக முத்துக்குமரன் அதிக ஓட்டுகளால் முன்னணியில் இருந்து வருகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா என வாக்குகளால் பிக்பாஸ் வீட்டில் தங்களின் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு சமயத்தில், கடந்த சில வாரங்களாக சௌந்தர்யா - ஜாக்குலின் கூட்டணியில் பல பிரச்சினைகள் வெடித்தது.
கடும் சோகத்தில் சௌந்தர்யா செயல்
இது குறித்த பேசிய விஜய் சேதுபதி, இருவரின் கூட்டணியையும் சௌந்தர்யா நடந்து கொண்ட விதத்தையும் மோசமாக பேசியுள்ளார்.
இத்தனை நாள் சௌந்தர்யாவிற்கு சமூக வலைத்தளங்களில் இருந்த ஆதரவு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகின்றது.
தேவதைகள் மற்றும் பேய்கள் டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு சுடுகாடு போலவே மாறியிருந்தது. அத்துடன் பேய்களாக இருக்கும் பொழுது தர்ஷிகா, பவித்திரா மற்றும் ராணவ் உள்ளிட்ட பிரபலங்களை இவர்கள் ஓட ஓட விரட்டினார்கள்.
இவ்வளவு தவறையும் செய்து விட்டு சோகமாக சௌந்தர்யா தலைகீழாக படுத்து, சோக பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளியை வடிவேல் காமெடியுடன் இணைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |