சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு.. மோதிக் கொள்ளும் தீபக், அருண்.. ஒற்றை வார்த்தையால் கிளம்பிய சண்டை
பிக்பாஸ் வீட்டில் தீபக்- அருண் இருவருக்கும் இடையில் பாரிய வாக்குவாதம் கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
தற்போது 60 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரங்களில் இல்லாதவாறு நேற்றைய தினம் டபுள் எவிக்ஷன் கொடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக முத்துக்குமரன் அதிக ஓட்டுகளால் முன்னணியில் இருந்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா என வாக்குகளால் பிக்பாஸ் வீட்டில் தங்களின் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு சமயத்தில், சுறுசுறுப்பாக விளையாடி கொண்டிருந்த தர்ஷிகா திடீரென, விஜே விஷாலை காதலிப்பது போன்று நடந்து கொள்கிறார். இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
காலையில் வெடித்த சண்டை
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வேலைகளுக்காக ஆட்கள் பிரிக்கும் பொழுது சண்டை ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அருண் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பிக்பாஸ் வீட்டில் மற்றுமொரு வாதத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து பேசிய தீபக்,“அருண் நீங்கள் கூறுவது சரியில்லை சமையல் குழுவிற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க அவசியம். அதே சமயம் வீட்டை சுத்தப்படுத்தும் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...” எனக் கூறியுள்ளார்.
இருவரின் வாதம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினைக்கு இந்த வாரம் கேப்டன் என்ன முடிவு கூறுவார் என்பதனை எபிசோட்டில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |