38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித்- பிரியா ராமன் போட்ட கண்டிஷன்
பிக்பாஸ் வீட்டில் 77 நாட்கள் இருந்து விட்டு வெளியேறிய ரஞ்சித்திற்கு பிரியா ராமன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவடைய இன்னும் 4 வாரங்கள் மட்டுமே இருக்கிறது.
11 வாரத்திற்கான எலிமினேஷன் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவரை அழைத்து செல்வதற்காக அவருடைய காதல் மனைவி பிரியா ராமனும் வருகை தந்தியிருந்தார்.
பிரியா ராமன் போட்ட கண்டிஷன்
இந்த நிலையில், "உங்களை திரையில் தான் பார்த்திருக்கிறேன், நேரில் இப்போது தான் பார்க்கிறேன்" என பிரியா ராமனிடம் கூறினார் விஜய் சேதுபதி. அதன் பின்னர் ரஞ்சித்தை வர வைத்து அவரது பயண வீடியோவை போட்டு காட்டினார்.
உள்ளே போன ரஞ்சித் தற்போது ஒல்லியாகி வந்திருக்கிறார் என விஜய் சேதுபதி மேடையிலேயே கூற, பிரியா ராமனும் “ஆமாம்” என கூறியுள்ளார்.
மேலும், “அவர் இப்படியே இருக்க வேண்டும், மீண்டும் வெயிட் போட்டுவிட கூடாது எனவும் பிரியா ராமன்” அப்போது கூறுகிறார்.
அதற்கு ரஞ்சித், “நான் இன்னும் வீட்டுக்கு கூட வரல, இருங்க..” எனக் கூறியப்படி நன்றி கூறி விட்டு விடைபெற்றுள்ளார்.
மனைவி பிரியா ராமனுடன் ஜோடியாக செட்டில் இருந்து கிளம்பும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |