Money Box டாஸ்க்கில் ஏற்பட்ட டுவிஸ்ட்.. 15 வாரங்கள் தப்பிய போட்டியாளரை குறி வைத்த பிக்பாஸ்- நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8
பிக் பாஸ் 8ம் சீசன் கடைசி வாரம் என்றாலும் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 6 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது.
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும். அப்படி அவர்கள் வரவில்லை என்றால் எலிமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஜாக்குலின் எலிமினேஷன்
இந்த நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் பங்கேற்ற முக்கிய போட்டியாளரான ஜாக்குலின் ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வர முடியவில்லை.
இதனை தொடர்ந்து ஜாக்குலின் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீசனில் எல்லா வாரத்திலும் ஜாக்குலின் நாமினேட் ஆகி இருந்தாலும் மக்கள் வாக்களித்து காப்பாற்றி வந்தார்கள்.
ஆனால் கடைசியாக மேடைக்கு செல்லும் முன்னர் எலிமினேட் ஆகி இருப்பது கவலையடைய வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |