முந்திரி பழம் சாப்பிட்ட பின் மீன் சாப்பிட்டால் ஆபத்தா? மருத்துவத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்
பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
மீன்களில் பல வகைகள் உள்ளன, அவை அனைத்திலும் புரோட்டின், அயன், வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.
இவ்வளவு ஊட்டசத்துக்கள் கொண்ட மீன்களை தினமும் சாப்பிடுவதால் ஏகப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றது. இருந்தாலும் ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் பலன் கிடைக்காமல் போகின்றது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதே சமயம், அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்களை கொண்டது தான் முந்திரிப் பருப்பு. இது இனிப்புகள், பாயாசம், அல்வா, புலாவ், பிரியாணி போன்ற பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. பலருக்கும் பிடித்த பொருளாக இருக்கும் முந்திரி பருப்பில் மினரல்கள், வைட்டமின், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தருகிறது.
எந்த உணவையும் அளவாக சாப்பிடும் பொழுது அதன் முழு பலனையும் பெற்றுக் கொள்ள முடியும். மாறாக முந்திரி பருப்பை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது அதன் விளைவுகளால் சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அந்த வகையில், மீன்களுடன் முந்திரி பருப்பை சேர்த்து சாப்பிடும் பொழுது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மீன் சாப்பிடக்கூடாத உணவுகள்
1. பால் மற்றும் பால் பொருட்களுடன் மீன் சாப்பிடக்கூடாது. சிலர் மீன் சாப்பிட்ட பின்னர் தயிர் அல்லது பாலை குடிப்பார்கள். இது உடல் நலத்தை பாதிக்கும் செயற்பாடாகும். பால், தயிர் அல்லது பிற பால் பொருட்களுடன் மீன் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். அத்துடன் அஜீரணம், வீக்கம், வயிற்று வலி, தோல் தொற்று, தோலில் வெள்ளை புள்ளிகள் ஆகிய பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. மீன் சாப்பிடும் பொழுது அதனுடன் புளிப்பு பழங்களை சாப்பிடக்கூடாது. சிலர் சிட்ரஸ் பழங்களை சாலட்டில் சேர்ப்பார்கள். இப்படி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும். உதாரணமாக, எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டி தன்மை கொண்டவை. மீனில் புரோட்டின் உள்ளது. இவை இரண்டு ஒன்றாக வயிற்றில் கலக்கும் பொழுது வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
3. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுடன் மீனை சேர்த்து சாப்பிடக் கூடாது என கூறப்படுகின்றது. ஏனெனின் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
4. உருளைக்கிழங்கு, பாஸ்தா போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் மீன் சாப்பிடக்கூடாது. செரிமான அமைப்பு மந்தமாகவும், மெதுவாகவும் மாறும். இதன் காரணமாக என்ன சாப்பிட்டாலும் செரிமானம் அடையாமல் வயிற்றில் இருக்கும். இதனால் வலி கூட ஏற்படலாம்.
5. மீன் சாப்பிடும் போது, காரமான உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவுகளில் இருக்கும் காரம் வயிற்றில் உப்புசம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிலருக்கு இரைப்பை குடல் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |