இந்த சின்ன வயது பிக் பாஸ் பிரபலம் யார் தெரியுமா? ரௌடி பேபியா இருந்தவங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடை வரை முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பினை தவறிவிட்ட பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்துக்குமரன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பெற்றார். சௌந்தர்யா குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, சக மனிதர்களால் தான் கிண்டல் செய்யப்பட்டதாக விஜய் சேதுபதியிடம் கூறினார். ஆனால் விஜய் சேதுபதி உங்களது குரல் தான் ப்ளஸ் என்று கூறி அவரை தட்டிக் கொடுத்தார்.
மேலும் சௌந்தர்யாவின் குறும்புத்தனம் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்டார். இறுதி மேடையில் விஜய் சேதுபதி வெற்றியாளரை அறிவித்த பின்பு, தனது கையை தூக்கிவிடுவீர்களோ என்று பயந்ததாகவும், முத்துக்குமரன் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.
குழந்தைப் பருவ புகைப்படம்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது காதலரிடம் காதலை ப்ரொப்போஸ் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவர் காதலிக்கும் நடிகர் விஷ்னு ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஆவார்.
இவ்வாறு பிக்பாஸ் மூலம் மக்கள் மனதை வென்ற செளந்தர்யா, ஸ்கூல் படிக்கும் போது எடுத்த செம க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
இதனை அவதானித்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டின் ரௌடி பேபி சௌந்தர்யாவா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |