Soya Chukka: வெறும் 5 நிமிடத்தில் மட்டன் சுவையில் சோயா சுக்கா
சோயா சங்க்ஸ் என்றும் அழைக்கப்படும் மீல் மேக்கரை வைத்து மட்டன் சுவையில் சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அசைவ உணவுகளில் சிக்கன் மட்டன் என்றால் பெரும்பாலான அசைவ பிரியர்கள் பிரியம் என்று கூறலாம். ஆனால் இவை விலை அதிகமாக உள்ள நிலையில், இதே சுவையில், சோயா சுக்கா செய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சோயா – ஒரு கப் (மீல் மேக்கர்),
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தழை – சிறிது
பச்சை மிளகாய் – 2
சுக்கா மசாலாவிற்கு
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
சோயா சுக்கா செய்வது எப்படி?
முதலில் சூடான தண்ணீரில் சோயாவை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சோம்பு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து மசிந்தவுடன், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.
பின்பு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு மீல் மேக்கரையும் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சுக்கா மசாலா மற்றும் கீறிய பச்சை மிளகாய், மல்லித்தழையை சேர்த்து இரண்டு பிரட்டு, பிரட்டி எடுத்தால் சூப்பர் சுவையான சோயா சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |