பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மாகாபா ஆனந்த்- வஞ்சத்தை கிண்டிவிட்ட கேள்வி
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சண்டையை மேலும் தூண்டி விடும் வகையில் மாகாபா செய்த வேலை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பணப் பெட்டி வைப்பது, பணப் பெட்டியுடன் சேர்த்து விளையாட்டிலும் தொடர்வது என போட்டிகள் பரபரப்பாகி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.
90 நாட்களுக்கும் மேலாக வீட்டில் விளையாடி வரும் போட்டியாளர்களின் மனதை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். இதில் பலரும் சௌந்தர்யாவின் பிஆர் டீம் குறித்து பல கருத்துகள் கூறி அவரை அழ வைத்தனர்.
பின்னர் அவரை பிக்பாஸும் விஜய் சேதுபதியும் சமாதானம் செய்தனர். இருந்தாலும், வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள் பல பிரச்சனைகளை தெரிந்தும் தெரியாமலும் ஏற்படுத்தி வந்த வண்ணமே இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர் அல்லாத நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மாகபா ஆனந்த் என்ட்ரி
அந்த வகையில், பிரபல தொகுப்பாளர் மாகபா ஆனந்த் என்றி கொடுத்துள்ளார்.
அவர், உள்ளே வந்தவுடன் போட்டியாளர்கள் அனைவரையும் தனித்தனியாக இன்டர்வியூ எடுக்க ஆரம்பித்து விட்டார். அவரின் நேர்காணலில் போட்டியாளர்களின் நிறைகள், குறைகள், மறக்க முடியாத சம்பவம் குறித்த கேள்விகளை எழுப்பி வந்தார்.
அதாவது, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்னைப் பற்றிய பேச்சுகள் வந்தது. அதன் காரணமாகத் தான் நான் இப்போது இந்த வீட்டிற்குள் வந்துள்ளேன் எனக் கூறி போட்டியாளர்கள் அனைவரிடமும் கேள்வி எழுப்பி வருகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |