8ம் கிளாஸ் படிச்சு டாக்டர் ஆக போறியா? சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் குத்திக்காட்டும் பிரதீப்!
8ம் கிளாஸ் படிச்சு டாக்டர் ஆக போறியா? என பிரதீப் - ஜோவிகாவை பங்கமாய் கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் வர்மா வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் எவிக்ஷனில் அனன்யாவும் வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
கடுப்பில் ஜோவிகா
இப்படியொரு நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகா விஜய குமார் பார்க்கப்படுகிறார்.
இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளி படிப்பை கூட நிறைவு செய்யாத நிலையில் இதனையே குற்றி காட்டி பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம், டாஸ்க்கால் அடிப்பட்ட போட்டியாளர்களுக்கு ஜோவிகா முதலுதவி செய்து மருந்து போட்டு விட்டார்.
இதனை கவனித்த இந்த வார தலைவர், பூர்ணிமா” நீங்கள் டாக்டராக வரலாம் என யோசிக்காமல் ஒரு வார்த்தை கூறியுள்ளார்.
இதனை பார்த்த பிரதீப், “ 8ம் கிளாஸ் படிச்சிட்டு டாக்டராக போறியா?” என நக்கலாக பேசியுள்ளார். இதற்கு எப்படி ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் ஜோவிகா பேசாமல் நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |