இது கூட தெரியாதா? நீயா நானா அரங்கத்தில் கருத்து மோதல்.. கடுப்பாகிய கோபிநாத்!
நீயா நானாவில் வெடித்த கருத்து மோதல் காரணமாக தொகுப்பாளர் கோபிநாத் கடுப்பாகியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் படிக்காமல் வாழ்க்கையில் சாதித்தவர்கள், படித்து வாழ்க்கையில் சாதித்தவர்கள் என இரண்டு குழுக்கள் பிரிந்துள்ளார்கள்.
ஏற்றி விடும் கோபிநாத்
பொதுவாக நம் உலகில் படித்தும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலைகளை பார்த்து கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமலும் சிலர் இருக்கிறார்கள்.
இந்த வாரம் வெளியான ப்ரோமோவில், படித்தவர்கள் வாதம் தலையோங்கும் வகையில் இருக்கின்றது.
படித்தவர்கள் என வெளியில் கூறிக் கொண்டு சரியாக நான்கு வசனம் கூட பேச தெரியாமல் இருப்பதாக படிக்காதவர்கள் பக்கம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்தில் காரசாரமாக விவாதமாக மாற்றுவதற்காக கோபிநாத் கேள்விகளை அடுக்கி கொண்டு இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |