வெளியேற்றப்படுவாரா ஜோவிகா? இது அவளுக்கு தேவை தான்- நடிகை வனிதா
ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி அழுததற்காக, இது அவளுக்கு தேவை தான் என வனிதா தெரிவித்துள்ளார்.
வனிதாவின் மகளாகிய ஜோவிகா வீட்டை விட்டு போறேன் என கடந்த வெள்ளிக்கிழமை அழுதுள்ளார்.
இதற்கு பதிலளித்து நடிகை வனிதா பிரபலமான ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
“உண்மையில் ஜோவிகா நிறைய குழம்பி போய் இருக்கிறாள், அவளை பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் மற்றும் அம்மா அதை எப்படி எதிர்கொண்டு கொண்டிருக்கிறாள், அவளுடைய சினிமா கனவு என்ன ஆவது என்று குறித்த யோசனையில் அவள் கோபப்பட்டு அழுதுள்ளார்.
இந்த வாரம் முழுவதுமே நாம் இருக்கும் இடம் சரியாக இல்லையோ? என்றும் நாம் வேறு மாதிரி சித்தரிக்கப்படுகிறோமோ? என்ற யோசனையிலேயே இருந்து வருகிறாள்.
ஜோவிகா, பூர்ணிமா, மாயா ஆகியோரை கேங் என்று கூறும் மணி மற்றும் ரவீனா ஒரே கேங்காக தான் இருகிறார்கள். உண்மையை சொல்லப்போனால் இது அவளுக்கு மிக மிக தேவையான ஒரு கொந்தளிப்பு என்று சொல்வேன்.
ஜோவிகாவிடம் பேசுவதற்கு எதுவும் இருக்கவில்லை. , உண்மையை சொல்லப்போனால், அவள் மாட்டிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதை தினேஷும் மணியும் விடவே மாட்டார்கள். இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்.” என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |