பலருக்கு வேட்டு வைக்க போகும் விவாத டாஸ்க்! கொதித்தெழும் பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கிடையில் சண்டைகள் மீணடும் சூடுபிடித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்டு வெகு விமர்ச்சையாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இவர்களில் மக்களின் மனதை வென்ற போட்டியாளர்க்ள மாத்திரமே இந்த நிகழ்வில் இறுதி வாரத்திற்கு செல்விருக்கிறார்கள்.
பிக் பாஸை கடுமையான போட்டியாக மாற்றுவதற்கு பிக் பாஸ் கடுமையான டாஸ்க்களை கொடுத்து வருகிறார்.
புதிய டாஸ்க்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்களுக்கான விவாதம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் சிவின், ரக்ஷிதா மகாலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களின் முழு பங்களிப்பையும் கொடுத்து விளையாடி வருகிறார்கள்.
இவர்களின் பங்களிப்பை விட ரக்ஷிதாவின் மாற்றங்களே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.
சேவ் கேம் விளையாடும் போட்டியாளர்கள்
காரணம், ரக்ஷிதா பிக் பாஸ் போட்டியில் ஆரம்பத்திலிருந்து சேவ் கேம் விளையாடி வந்ததாக ரசிகர்கள் உட்பட பலரால் குற்றஞ்சாட்டபட்டார்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்கில் தன்னுடைய முழு பங்களிப்பையும் போட்டு தற்போது விளையாடி வருகிறார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.