திருநங்கைகளால் களைகட்டப்போகும் பிக்பாஸ் 5: யார் யாரெல்லாம் செல்கின்றனர் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் தெரிவு நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் படப்பிடிப்பு சமீபத்தில் புகைப்படமாக லீக்காகி மக்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்த நிலையில், செட் போடும் பணி நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 30 பிரபலங்களிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் யார் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல ரிவி பிரபலங்களான, சுனிதா, கனி, தர்ஷா, மற்றும் மைனா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சற்று சுவாரசியத்தினை அதிகரிக்கும் விதமாக திருநங்கைகளை நிகழ்ச்சியில் இறக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் ஷகிலாவின் மகள் மிளா மற்றும் பிரபல மாடல் நமீதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கடந்த 4 சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு பல வித்தியாசங்களை பிக்பாஸ் குழுவினர் செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.