பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. டைட்டில் வின்னர் ஆரி போட்ட பதிவு! குழம்பி போன ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதில், பேசும் இமான் அண்ணாச்சி, ஒரு நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று சொல்கிறார். உடனே போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகிறது.
இதன்பின், அப்போது நிரூப் ஏதோ சொல்ல, அவரை அருகில் இருக்கும் சிபி கண்டிக்கிறார். உடனே கோபமடையும் நிரூப், இமான் அண்ணாச்சியிடம், உங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது என்று கேட்க, சிரிக்கலாமே என்கிறார் இமான் அண்ணாச்சி. உடனே எனக்கு சரியாகப்படவில்லை என சொல்லும் சிபி, மற்றவர்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் ? என்று கூறி வேகமாக அங்கிருந்து எழுந்து செல்கிறார். நிரூப்பை அபிஷேக் ராஜா சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
இதனால், ரசிகர்கள் ஆட்டம் எப்பொழுது சூடு பிடிக்கும் என காத்திருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது. பலரும் பல கமெண்ட்ஸ்களை பதிவிட தொடங்கிய நிலையில், பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரி பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம் என்று ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Bigg boss game begins...#BiggBossTamil https://t.co/AJx11mQimv
— Aari Arujunan (@Aariarujunan) October 6, 2021