Bigg Boss 10: பைக்கில் உள்ளே நுழைந்த Wild Card Entry! அரண்டு நிற்கும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களாக மூன்று புதிய போட்டியாளர்கள் உள்ளே செல்கின்றனர்.
பிக்பாஸ் 10வது சீசனில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்துவரும் நிலையில், இன்றும் பல ட்விஸ்ட்டை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

டிடிஎஃப் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா என மூன்று போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதில் கரிஷ்மா காமன்மேன் நிகழ்ச்சியிலிருந்து வரும் போட்டியாளர் ஆவர்.
அதே போன்று அக்ஷிதா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் விளையாடிவரும் அவினாஷின் தங்கை ஆவார். தங்கை உள்ளே வந்ததும் அவினாஷ் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.
மேலும் வைல்டு கார்டு போட்டியாளர்களை அவதானித்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் வாயடைத்துப் போயுள்ளனர்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா?
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |