உனக்கெல்லாம் இப்படிதான்டா நடக்கும்: விக்ரமிற்கு சாபம் விடும் மைனா!
பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் மைனா நந்தினி இருவரும் பேசிக்கொள்ளும் விடயம் தற்போது அதிகம் பேசப்பட்டடு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்துக்கொண்டிருக்கின்றது. தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 9 போட்டியாளர்களுடன் செல்கின்றது.
Freeze டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்களை வரவழைத்து போட்டியாளர்களை திடமாக்கும் வகையில் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் போட்டியாளர்கள் இவ்வளவு நாள் தங்களின் உறவினர்களை பார்த்து அழுது புலம்பி வருகிறார்கள்.
ஒரு சிலர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இவ்வாறு விளையாட வேண்டும் என டிப்ஸ் கொடுத்து செல்வார்கள்.
விக்ரமன் - நந்தினி
இந்நிலையில் கார்டன் பகுதியில் விக்ரமன் மற்றும் மைனா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விக்ரமன் கூறியவற்றை கேட்டுக்கொண்டிருந்த மைனா,"அவ்வளவு நடந்தீங்களா நீங்க?" என்றார்.
அப்போது, விக்ரமன் ஆம் என்பது போல தலையசைக்கிறார். உடனே மைனா,"நடிப்பு, நான் பார்க்கவே இல்லை" என்கிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன்,"பார்க்காம எப்படி நடிப்புன்னு சொல்றிங்க?. பார்த்த விஷயத்துக்குதான் ஒருத்தர கருத்து சொல்லணும். பார்க்காத விஷயத்துக்கு கருத்து சொல்லக்கூடாது" என சிரித்தபடியே சொல்றார்.
அப்போது மைனா,"உங்களுக்கு வரப்போற மனைவி எதுவுமே தெரியாம, எல்லாத்துக்கும் என்ன, என்னன்னு கேக்குற மாதிரி வரப்போறாங்க பாருங்க" எனச் சொல்ல விக்ரமன் "பரவாயில்லை" என்றார்.
தொடர்ந்து பேசும் மைனா,"உங்களுக்கு உங்க அப்பாவே பரவால்ல. அவர் ஜாலியா வந்தாரு, கலாய்ச்சாரு, சிரிச்சாரு போய்ட்டாரு. அம்மா சைலண்டா?" என்றார்.
அதற்கு விக்ரமன் "ஆமா, ஆனா பேசுவாங்க" என்றார்.