அசீமை பார்க்க உதயநிதி வருவாரா? அசீமை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்
அசீமை பார்க்க உதயநிதி வருவாரா என அசீமை வச்சி செய்யும் இணையவாசிகள்.
அசீம்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது சூட பிடித்து சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பிக்பாஸ் அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் போட்டியாளர்களும் அதற்கேற்ப தயார்நிலையில் உள்ளனர்.
இந்த சீசனில் ஆரம்பம் முதல் இன்று வரை பெரும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அசீம் இருந்துவருகிறார். எப்படி சர்ச்சைகள் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் தனது உண்மையான முகத்தை காட்டி விளையாடுவதால் இவருக்கு பெரும் ஆதரவும் உள்ளது.
இதனால் நாமினேஷனில் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளைப் பெற்று காப்பற்றப்பட்டு வருகிறார். ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம்.
Freeze டாஸ்க்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது Freeze டாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என ஒவ்வொருவராக வருவது வழக்கம்.
இந்நிலையில், விக்ரமனின் அரசியல் பின்புலத்தைப் பற்றி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி வரும் அசீம், தீபாவளித் தினத்தன்று ”உதய் அண்ணா மற்றும் கிருத்திகா அண்ணி உங்களை நான் மிஸ் பண்ணுவேன் வருடம் வருடம் உங்களை வந்து நான் பார்ப்பேன். ஆனால், இந்த முறை உங்களை பார்ப்பேன். முடியவில்லை. ஹேப்பி தீபாவளி அண்ணா மற்றும் அண்ணி’ என பேசி இருப்பார்.
இதனால் தனக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது என வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் அசீம் பற்றி இந்த வாரம் Freeze டாஸ்க்கில் தன்னைப் பார்க்க உதயநிதி வர வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பதாக நெட்டிசன்கள் அசீமை கேலி செய்து வருகின்றனர்.