ரசிகர்களே... பிக்பாஸ் தோல்விக்கு பின் மாயா வெளியிட்ட அறிக்கை
பிக்பாஸ் மாயா அவரின் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சியில் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் ஷோவாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு எட்டாவது சீசனுக்கு தயாராகி கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஏழாவது சீசனில் பங்கேற்ற முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் மாயா. இவர் ஒரு நடிகை. அவற்றை தாண்டி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பிரதீப்பிற்கு ரெட்கார்ட் கொடுத்த காரணத்தால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் பூர்ணிமா, ஐசு, ஜோவிகா ஆகியோரை இணைத்து கொண்டு தனக்கென ஒரு குழுவை உருவாக்கி வைத்திருந்தார்.
நாளடைவில் இவரின் நடத்தை காரணமாக ரசிகர்கள் குறைய ஆரம்பித்து பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில் 3வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்
இந்த நிலையில் வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாயா ரசிகர்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நன்றி. என்னுடைய குறைகளை அனுமதித்து, என்னுடைய போராட்டத்தில் உறுதுணையாக நின்றதற்காக நன்றி. மரியாதை.. அளவில்லா அன்பு.. என்னுடைய இதயத்துடிப்பு நிற்கும் வரை இருக்கும்.
இந்த 105 நாட்கள் என்னுடைய மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போறேன். எல்லாமே உங்களுக்காகத்தான்..” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
To all the agents in my squad. ❤️ pic.twitter.com/UZmuSWPLzx
— Maya S Krishnan (@maya_skrishnan) January 17, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |