பாவனியால் மனைவியை பிரிந்த அபிநய்...பெயரை நீக்கியது ஏன்? முடிவுக்கு வந்த விவாகரத்து சர்ச்சை?
பாவனியால் மனைவியை அபிநய் பிரிந்து விட்டதாக வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அபிநய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கு மேல் விளையாடி வெளியேறினார்.
சமீபத்தில் பிக் பாஸ் அல்டி மேட் நிகழ்ச்சிக்கு சென்ற அபிநய் மூன்றாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.மீண்டும் அபிநய் வந்த பிறகு எல்லோரும், நீங்களும் உங்கள் மனைவியும் பிரிந்து விட்டீர்களா? என்னாச்சு? ஏதாச்சு? என்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தார்கள்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அபிநய் தன் மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு எல்லோரும் என்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து கேட்டு இருந்தீர்கள் அவர்களுக்கான பதில் தான் இது என்று பதிவிட்டிருந்தார்.
அதே போல ரசிகர் ஒருவர், உங்களுக்கு விவகாரத்து ஆகிடுச்சா என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்துள்ளார்.
இதன்முலம் அபிநய் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அபிநய்யும், அவருடைய மனைவியும் பிரிய வில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது அபிநய் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
