44 வயதிலும் குட்டை உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பூமிகாவின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி இணையத்தை அழகாக்கிக் கொண்டிருக்கிறது.
நடிகை பூமிகா சாவ்லா
1978ம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தவர் பூமிகா. இவர் தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்துவிட்டு நடிப்பில் ஆர்வம் அதிகம் இருந்ததால் 2000ஆம் ஆண்டு யுவக்குடு என்ற தெலுங்குப் படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் ரோஜாக்கூட்டம் படத்தில், நடிகர் ஸ்ரீகாந்த்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்தப் படத்திற்கு தொடர்ந்து பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், பெண் அடிமை இல்லை. துள்ளி எழுந்தது காதல் என பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்களில் நடிப்பதில் மட்டுமல்லாமல் படங்களைத் தயாரிப்பதிலும் இறங்கியிருந்தார் ஆனால் அதுவும் வெற்றியளிக்கவில்லை.
இவர் 2007ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார். பிறகு 2021ஆம் ஆண்டில் தமிழில் ஒரு படம் நடிக்க வந்துவிட்டார்.
மேலும், தமிழில் இவர் நடித்த இறுதித் திரைப்படம் கொலையுதிர்காரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் போட்டோ
நடிகை பூமிகாவிற்கு தற்போது 44 வயதாகின்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு இவ்வளவு வயதாகி விட்டது என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
ஆரம்ப படங்களில் பார்த்தது போல இன்னும் கொள்ளை அழகுடனும், இளமையுடனும் இருக்கிறார்.
இந்தப் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.