பாவனி அமீர் காதல் விவகாரம்! கேவலமாக பேசிய வனிதா... அமீர் கொடுத்த பதிலடி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா பாவனி அமீர் காதலைக் குறித்து மோசமாக பேசியுள்ள நிலையில், இதற்கு அமீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பாவனி மூன்றாவது் இடத்தினை பிடித்தார். இந்த சீசனில் கலந்து கொண்ட அமீர் பாவனியைக் காதலித்து வந்தார். தற்போதும் இவர்கள் வெளியே ஒன்றாக பல இடங்களுக்கு சென்று நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.
அமீரின் காதலுக்கு பாவனி மறுப்பு தெரிவித்தாலும், அமீர் தனது காதலில் உறுதியாக இருந்து வருகின்றார். இதனை பலமுறை நேரடியாக பாவனியிடமும் பிக்பாஸ் வீட்டில் கூறியுள்ளார்.
[ARGGNG[
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாவனி குறித்து பேசிய அனிதாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமீர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா, தொடர்ந்து மற்றவர்களை பற்றி தான் அதிகம் குறை சொல்லி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாவனி குறித்து பேசி இருந்தார்.
அதில், பாவனி என்ன விளையாட்டு விளையாடினார் என்று அவர் எல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறார். சொல்லப்போனால் நீ வந்து இருக்க வேண்டும் நிரூப். பாவனி பிக்பாஸில் அமீரை லவ் பண்ணதை தவிர வேறு ஒன்றும் பண்ணவில்லை என்று கூறியுள்ளார்.
Anitha review about pavini game. So cheap, Pavini tolerance and humiliation and carried with smile all the time in the show was the best example. Question is how you survived on previous season and now?#pavini pic.twitter.com/UL9aLeO4sx
— Ravindhar Chandrasekaran (@fatmanravi) February 24, 2022
அவர் என்ன கேம் ஆடினார். அவரின் ரசிகர்களால் தான் அவர் பைனல் வரை வந்தார் என்று கூறி இருந்தார் அனிதா. இந்த வீடியோவால் பாவனியின் ரசிகர்கள் அனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை கண்ட அமீர், பாவனி குறித்து பேசிய அனிதா மற்றும் நிரூப், சுருதி, தாமரைக்கு அமீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், எதுவும் செய்யாமல் யாரும் இறுதி போட்டி வரை செல்லவில்லை.
தன்னந்தனியாக நின்று கேமை விளையாடியது பாவனி மட்டும் தான் என்று கூறி இருக்கிறார் என்ற அமீரின் பதிலுக்கு, பாவனி நன்றி தெரிவித்துள்ளார்.