திருமணமாகி 10 வருஷாமாகியும் குழந்தை இல்லையா? விஜே பாவனாவை கண்கலங்க வைத்த ரசிகருக்கு வெளியிட்ட புகைப்படம்!
பிரபல விஜய் ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பின்னர், அடுத்தக்கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார்.
இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது என கேட்டுள்ளார்.
அதற்கு, பத்து வருடங்கள் ஆகிவிட்டது என vj பாவனா பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் உங்களுக்கு குழந்தை உள்ளது. அது சரியா? தவறா? என கேட்டுள்ளார். இங்குதான் விஜய் பாவனா வருத்தப்பட்டுள்ள விஷயம் வெளியில் தெரிய வந்தது. குழந்தை இல்லை என்பதை சொல்லாமல் தான் வளர்க்கும் நாய் குட்டியை காட்டி, எனக்கு ஒரு சகோதரர் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், திருமணமாகி பத்து வருடமாகியும் பாவனாவுக்கு குழந்தை இல்லை என்ற விஷயம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த பதிவு பாவனாவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.