கண்ணம்மாவிற்காக துடித்த பாரதி! வெண்பாவின் சூழ்ச்சி துவம்சமாகிய தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீசன் 2ல் பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் இடையே அருமையான கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கின்றது.
பாரதி கண்ணம்மா சீசன் 2
பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார். பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார்.
சிறையில் இருந்து வெளிவரும் சித்ரா உறவினர்களால் விரட்டப்பட்டு, ஊரை விட்டு வெளியேறுகின்றார். அப்பொழுது பேருந்தில் கண்ணம்மாவின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அத்தருணத்தில் சித்ராவைக் கொலை செய்ய வந்த ரவுடிகள் கண்ணம்மாவைக் கொலை செய்ததால், தனது பெயரை கண்ணம்மாவாக மாற்றி அவர்களின் வீட்டிற்கே சித்ரா செல்கின்றார்.
பாரதியுடன் மோதல்
அப்பொழுது பாரதியுடன் ஆரம்பித்த கண்ணம்மாவின் எண்ட்ரி தற்போது வேற ஒரு கெமிஸ்ட்ரியில் சென்று கொண்டிருக்கின்றது. வில்லியாக வெண்பா களமிறங்கிய முதல் நாளிலே, கண்ணம்மாவிடம் அடி வாங்கினார்.
இதனால் கண்ணம்மாவை பழிவாங்க தனது வில்லத்தனத்தினை ஆரம்பித்த வெண்பாவின் கதை ஒருபுறம் இருந்தாலும், பாரதி மற்றும் கண்ணம்மாவின் கெமிஸ்ட்ரி மற்றொரு புறம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.