டிஎன்ஏ எடுக்க செல்லும் பாரதி! அடுக்கடுக்காக அவிழும் உண்மைகள்: பாரதி கண்ணம்மாவின் பரபரப்பு ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த வாரம் பல அதிரடியான உண்மைகள் வெளிவருவதுடன், மக்கள் எதிர்பார்த்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு பாரதி சம்மதம் தெரிவித்திருக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சீரியல் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

டிஎன்ஏ டெஸ்ட்
இந்நிலையில் வெண்பாவின் சதியின் வலையில் வீழ்ந்த பாரதி அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் பாரதி தனக்கும் லெட்சுமி, ஹேமா மூன்று பேருக்கும் டிஎன்ஏ எடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். டிஎன்ஏ-வில் மேட்ச் ஆகவில்லை என்றால் வெண்பாவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றார்.
மறுபுறம் வெண்பாவிற்கு பார்த்த மாப்பிள்ளை ரோகித்தின் உண்மையான சுயரூபத்தை வெண்பாவின் தாய் ரேகா அறிகின்றார். தனது தாய் என்று பாரதி காட்டிய புகைப்படம் இருக்கும் வீட்டிற்கு ஹேமா செல்கின்றார்.
இவ்வாறு அடுத்தடுத்து பல திருப்பங்கள் குறித்த சீரியலில் வரவிருப்பதால் ஒருவழியாக இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கை மக்கிடையே எழுந்துள்ளது.